search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் மர்ம விலங்கு கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு
    X

    உடுமலை பகுதியில் மர்ம விலங்கு கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு

    • கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.
    • குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    உடுமலை :

    உடுமலையையடுத்த பெரிய கோட்டை ஊராட்சிக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம விலங்குகளால் ஏராளமான ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இந்த நிலையில் சின்னவீரன்பட்டி புஷ்பகிரி வேலன் நகரைச் சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் என்பவரது வீட்டை ஒட்டிய பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்குகள் பட்டிக்குள் இருந்த 18 ஆடுகளையும் கடித்துக் குதறியுள்ளது. ஆடுகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்ததுடன், உடல் பாகங்களையும் கடித்துத் தின்றுள்ளது. இதில் 18 ஆடுகளும் செத்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் இறந்த ஆடுகளை குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் கூறும்போது " கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.

    அந்த நாய்களைப் பிடிக்க உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மர்ம விலங்குகள் அட்டகாசம் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் காலத்தில் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×