

பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில், மாகாளியம்மன், காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 6-ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.