சேலத்தில் 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக் கொலை-பரபரப்பு 3 பேருக்கு வலைவீச்சு

விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
சேலத்தில் 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக் கொலை-பரபரப்பு 3 பேருக்கு வலைவீச்சு
Published on

சேலம்:

சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். விஜயகுமாருக்கு ரேகா தேவி(28) மற்றும் வைஷ்ணவி(27) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு மகனும் 2-வது மனைவிக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருவாக் கவுண்டனூர் பகுதியில் வசித்து வருகிறார். 2-வது மனைவி வைஷ்ணவியுடன் விஜயகுமார் வசித்து வந்தார்.

கடந்த மாதம் 25-ந் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்த புகார் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

விஜயகுமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 வாலிபர்கள் விஜயகுமாரை தாக்கி உள்ளனர் இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

விஜயகுமாரை தாக்கிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் இது சம்பந்தமாக சிலரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com