என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பட்டுக்கோட்டையில், ரெயில் சேவை தொடக்கம்
  X

  பட்டுக்கோட்டை ரெயில் நிலையம்.

  பட்டுக்கோட்டையில், ரெயில் சேவை தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
  • ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 16 வருடங்களுக்கு பிறகு திருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி ரெயில் தடத்தில் முதன் முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்படும்.

  சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் நாளை வரவேற்பு அளிக்கப்–படுகிறது.

  தென்மத்திய ரெயில்வே சார்பில் இன்று 24-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 07695) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நல்கொண்டா குண்டூர் தெனாலி ஓங்கோல் நெல்லூர் கூடூர் வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்து, தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறது.

  தொடர்ந்து அறந்தாங்கி- காரைக்குடி- சிவகங்கை- மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று அடைகிறது.

  மீண்டும் இந்த ரெயில் (வண்டி எண் 07696) இதே வழி தடத்தில் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.

  அதனைத் தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.

  இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் புதன்கிழமைகளில் இரவு செகந்தராபாத்தில் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு சென்று சேரும். மீண்டும் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்னை வழியாக செகந்திரா பாத்திற்கு சனிக்கிழமைகளில் நண்பகலில் சென்று சேரும்.

  இந்த ரெயில் மூலமாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்தி ராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

  இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2 சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரெயில் பெட்டிகளை கொண்டிருக்கும்

  இந்த சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 4.50 மணிக்கு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

  Next Story
  ×