பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை உயர்வு

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பூக்கள் ஏல சந்தையில் பூக்களில் விலை‌ உயர்வடைந்துள்ளது.
பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை உயர்வு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பூக்கள் ஏல சந்தையில் பூக்களில் விலை உயர்வடைந்துள்ளது.

பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டுமல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கட்டான், ரோஜா, அரளி, சம்பங்கி, சாமந்தி, செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள இரு பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

பூக்களை ஏலம் எடுப்பதற்கு வேலூர், ஜேடர்பா ளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை பூ ஒரு கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.

இன்று நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.180-க்கும், அரளி கிலோ ரூ.280-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது. மஹா

சிவராத்திரியை முன்னிட்டு

பூக்கள் விலை உயர்ந்துள்ள தாக விவசாயிகள், வியாபாரி கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com