search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோளையானூரில்   ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம   மேல்நிலைபள்ளி அறிவியல் கண்காட்சி
    X

    மோளையானூரில் ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைபள்ளி அறிவியல் கண்காட்சி

    • ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • சுமார் 400 பேர் பெரும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டு தங்களின் அறிவாற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளை யானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சி எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 400 பேர் பெரும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டு தங்களின் அறிவாற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தினர்.

    இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் தாளாளர் நைனான், தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் வேணு, மேலாளர் கனி, பள்ளியின் முதல்வர் கலைவாணி, ஆசிரியர் பெர்னாட்ஷா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை பார்வை யிட்டு மாணவ ர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டு களையும் தெரி வித்து ஊக்கப்படுத்தினர்.

    மேலும் அனைத்து மாணவர் களும் கண்காட்சியை பார்வை யிட்டு அறிவியல் சம்பந்தப் பட்ட கருத்துக்களை செய்முறை விளக்கத்தோடு அறிந்துக்கொண்டனர்.

    Next Story
    ×