search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளியில் எருது விடும் திருவிழா
    X

    எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளையை படத்தில் காணலாம்.

    மாரண்டஅள்ளியில் எருது விடும் திருவிழா

    • அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .
    • சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு இதில் மாரண்டஅள்ளி பகுதியை சுற்றியுள்ள , வேங்கு தெரு, சொவத்தம்பட்டி, முகமதியர் தெரு, சந்தை வீதி, பைபாஸ் ரோடு, ஆணங்கிணற்று, என பல்வேறு பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வரப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், தர்ம கர்த்தா, ஆகியோர் முன்னிலையில் காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .

    இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க மாரண்டஅள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எருதாட்ட விழாவை கண்டு களித்தனர்.

    இந்நிகழ்ச்சியை பலத்த பாதுகாப்புடன் மாரண்ட அள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×