மன்னார்குடியில், பல்வேறு வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஆய்வு

அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.ரெயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டர் சாருஸ்ரீ.
கலெக்டர் சாருஸ்ரீ.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.

மன்னார்குடி ஜெயின தெருவில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார் .

இதனை தொடர்ந்து ரயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து நரிக்குறவர் மக்களிடம் கேட்டறிந்தார்.

நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி, மற்றும் மன்னார்குடி ருக்மணி குளம், தாமரைக் குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் கரைகள் மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com