search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடியில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    நகையை பறிகொடுத்த காந்திமதி.

    மன்னார்குடியில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்களிவ் வந்த இருவர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (75) .

    இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அங்கு நேற்று மதியம் பள்ளிக்கு சென்று இருந்த பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்களிவ் வந்த இருவர், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் காந்திமதியிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வயதானவர்கள் கழுத்தில் நகை அணிந்து தனியாக செல்லக்கூடாது வழிப்பறி நடக்கிறது.

    எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள்" எனக் கூறி அவரது மணிபர்ஸில் வைப்பது போல, ஏமாற்றி செயினை திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் வந்து மூதாட்டி காந்திமதி பார்த்தபோது செயின் இல்லை.

    இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் எனக் கூறி மூதாட்டி காந்திமதி இடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடிய இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மன்னார்குடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×