சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு-வாலிபர் மீது வழக்கு

ஓசூர் அருகே சிறுமி ஏமாற்றி கற்பழிக்கப்பட்டார்.ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பாய்ந்தது.
சிறுமியை காதலித்து  திருமணம் செய்து கொள்வதாக  ஏமாற்றி உறவு-வாலிபர் மீது வழக்கு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும், ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, நாகா சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நாகா அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இது பற்றி அந்த சிறுமி அவரிடம் கேட்ட போது எந்த பதிலும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் உறவு வைத்ததாக நாகா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com