கருமத்தம்பட்டியில் ஆயுதங்களுடன் மிரட்டும் கும்பலால் பொதுமக்கள் பீதி

மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர். போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருமத்தம்பட்டியில்  ஆயுதங்களுடன் மிரட்டும் கும்பலால் பொதுமக்கள் பீதி
Published on

கோவை

சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் பட்டா கத்தி மற்றும் இரும்பு தடியுடன் ஒவ்வொரு வீடாக பூட்டை உடைத்து உள்ளே வீட்டில் இருப்பவர்களை மிரட்டி அங்கிருந்த விலை மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர்.

இதேபோன்று சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வருவதற்கு உள்ளாகவே அங்கிருந்த கொள்ளையர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இச்சம்பவத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் கத்திflகுத்து காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் கருமத்தம்பட்டி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் பற்றிய உருவப் படத்தை வைத்து அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com