என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில்  நாளை கலந்தாய்வு தொடக்கம்
  X

  குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாளை கலந்தாய்வு தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது நாளை தொடங்குகிறது.
  • இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

  குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது நாளை தொடங்குகிறது.

  நாளை காலை 9.30 மணியளவில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணியளவில் பொதுப்பிரிவு மாணவர்க–ளுக்கும் நடைபெறவுள்ளது.

  இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணாக்கர்கள் நாளையும், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் 5-ந் தேதியும், தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள். அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Next Story
  ×