search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில்  சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் ; மாணவிகள், கலெக்டரிடம் புகார்
    X

    தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் ; மாணவிகள், கலெக்டரிடம் புகார்

    • தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கூறியதாவது

    காமராஜர் காலனி பாதியில் செப்டிக் டேங்க் அருகே குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள 400 குடும்பத்தினர் மிகவும் மோசமான குடிநீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

    எனவே பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×