கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்

கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு2-வது திருமணம் செய்து தனியாக குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது.
கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்
Published on

கோவை,

கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் அபர்ணா (வயது 33). இவரது கணவர் ஹ ரிபிரசாத் (37). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்த நிலையில் அபர்ணா கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது:-திருமணத்தின் போது எனது பெற்றோர் 25 பவுன் நகையை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தனர். வீடு கட்ட மற்றும் செலவுக்கு என அந்த 25 பவுன் நகையை எனது கணவர் ஹரிபிரசாத் அடகு வைத்தார். பின்னர் கூடுதல் நகை கேட்டு கொடுமை படுத்தி வந்தார்.

இது குறித்து கேட்டபோது எனது கணவர் ஹரிபிரசாத், என்னை தாக்கினார். மேலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த நான், விசாரித்தேன். அப்போது எனது கணவர் ஹரிபிரசாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 42 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்து தனியாக குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது. இதற்கு கணவரின் தந்தை செல்வராஜ் (65), தாய் கமலம் (63) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து புகாரின் பேரில், போலீசார் அபர்ணா வின் கணவர் ஹரிபிரசாத், மாமனார் செல்வராஜ், மாமியார் கமலம், ஹரிபிரசாத்தின் 2-வது மனைவி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com