ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி அடையாள அட்டைகளை வழங்கினார்.
விழாவில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்ட காட்சி.
விழாவில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்ட காட்சி.
Published on

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் குரூஸ் கோவில் வளாகத்தில் 300 நபர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, 1000 இலவச மரக்கன்றுகள் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு குரூஸ் கோவில் பங்குத்தந்தை கிஷோக், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான அடையாள அட்டை, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப் பையை வழங்கினார். தனி அலுவலர் ராமச்சந்திரன் கருத்துரை வழங்கினார். கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் வெள்ளூர் முத்துராஜ், முருகசெல்வி, கண்ணன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com