என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய போது எடுத்தபடம்.
கோபாலசமுத்திரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
- தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார்.
நெல்லை:
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் முகாம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் முருக பிரசன்னா முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். முத்திரை ஆய்வாளர் விஷ்வநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயாவதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். வித்யா மங்கல் பவுண்டேசன் நிறுவனர் ராகுல் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் 1513 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.






