சின்னசேலம் அருகே மனைவி வேலைக்கு போக சொன்னதால் கணவன் மாயம்

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.
சின்னசேலம் அருகே மனைவி வேலைக்கு போக சொன்னதால் கணவன் மாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com