பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது

பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார்.
பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலா ப்பட்டு இடையர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது காயத்ரி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்தார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து டீக்கடை நடத்தி வருகிறார்.அப்போது முருகதாஸ்சுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் முருக தாஸ் தற்கொலைக்கு தூண்டியதால்தான் காயத்ரி இறந்து இருப்பது தெரியவந்தது. எனவே அதன்பேரில் வழக்குபதிந்து முருகதாசை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com