என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
- கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
- பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே தேவாரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் செங்கல் காலவாசல் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றார்.
அவசரத்தில் வீட்டு கதவை பூட்டாமல் சென்றுள்ளனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் அன்பரசு (31). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சியடைந்த அன்பரசு உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு வெள்ளி க்கொலுசு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். அதில் சிலிண்டர் வாங்க வந்த மோகன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.






