இந்து முன்னணி நிர்வாகிக்கு சரமாரி கத்திக்குத்து

சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.
இந்து முன்னணி நிர்வாகிக்கு சரமாரி கத்திக்குத்து
Published on

திருப்பூர் :

திருப்பூர், சாமுண்டிபுரம் சூரியகாந்தி வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 25). இந்து முன்னணி சாமுண்டிபுரம் பகுதி பொறுப்பாளர்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு, (26), என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் சுரேந்திரன், நேற்று சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த ராம்பிரபு, சுரேந்திரனை கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

இதில் படுகாயம் அடைந்த சுரேந்திரன், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராம்பிரபுவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com