கடம்பூர் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் குடித்து மகிழும் யானை கூட்டங்கள்

யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடம்பூர் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் குடித்து மகிழும் யானை கூட்டங்கள்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர் நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிருக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டியில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

இதேபோல் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர்.

இதனையடுத்து இந்த வனப்பகுதியில் உள்ள யானை கூட்டங்கள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டியில் நீர் குடித்து மகிழ்கின்றன. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com