தொடர் மழை: முழுகொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை நீர்மட்டம்

தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது.57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது.
மஞ்சளாறு அணை (கோப்பு படம்)
மஞ்சளாறு அணை (கோப்பு படம்)
Published on

கூடலூர்:

தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. வரத்து 1884 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3361 மி.கனஅடி.

71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் 57.48 அடியாக உள்ளது. வரத்து 1756 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3138 மி.கனஅடி.

57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடியாக உள்ளது. நீர்வரத்து 44 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 94.34 மி.கனஅடி. அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டு மானாலும் முழுகொள்ள ளவை நெருங்கும் என்பதால் வராக நதிக்கரையோரம் உள்ள மக்களுக்கு பொது ப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com