search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பால்   பல லட்சம் வர்த்தகம் பாதிப்பு
    X

    வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் காந்தி மார்க்கெட்.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பால் பல லட்சம் வர்த்தகம் பாதிப்பு

    • வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.
    • இதனைதொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தாங்கள் காய்கறிகளை இறக்க மாட்டோம் எனக்கூறி வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திமார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் கொடைக்கானல் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் இங்கு தினந்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு அதிகாலை முதல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்காக 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நகர்பகுதியில் உள்ள சில்லரை வியாபாரக்கடைகளுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

    இதனைதொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தாங்கள் காய்கறிகளை இறக்க மாட்டோம் எனக்கூறி வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதனால் இன்று பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவரவில்லை.

    கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளும் வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திமார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. காய்கறிகள் விற்பனையாகாததால் இன்று மட்டும் ரூபாய் பல லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளிைடயே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சமரசம் ஏற்படாவிட்டால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×