இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ஊர்க்காவல்படை வீரர்

கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ஊர்க்காவல்படை வீரர்
Published on

கோவை

கோவை மேட்டுப்பா ளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண்.

இவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கும் 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து இளம்பெண் தனது மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று தன்னுடன் பழகுமாறு தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் இளம்பெண் பழகுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

சம்பவத்தன்று இளம்பெண் ஆஸ்பத்தி ரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தன்னுடன் பழகுமாறு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரிடம் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தால் கைது செய்து நடவடிக்கை எடுத்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com