கும்பகோணத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.மின்நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
கும்பகோணத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

கும்பகோணம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை 10-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்பகோணம் மாநகரம், புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர், புறநகர், திருக்கருக்காவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம், பிரிவு அலுவலகம் பகுதியினை சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு மின்விநியோகம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை கும்பகோணம் கோட்டம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com