search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருது
    X

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருதினை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருது

    • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி கலெக்டர் வழங்கினார்.
    • நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி:

    ஒவ்ெவாரு ஆண்டும் ஜூன் 5-ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதனை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாது காப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த வருடம் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும், பசுமை போர்வை அதிகரிக்க அதிகளவில் களப்பணி ஆற்றிய சோலைக்குள் கூடல் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இது குறித்து பேசிய அவர், நமது அன்றாட வாழ்வில் முடிந்தவரையில் ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மை யாளர் விருதிற்கு விண்ண ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அனைத்துறை அலுவலர்களும் ஏற்று க்கொண்டனர்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பர எல்.இ.டி.திரையினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மேனகா மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் தப்புக்குண்டு பகுதியில் 515 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    Next Story
    ×