காட்ரோடு சோதனைச்சாவடியில் அரசு பஸ்மோதி லாரி டிரைவர் பலி

பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்ட எல்லை யான தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு பேரிகார்டு அமைத்து வாகனங்களை சோதனை செய்து போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை யில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிரே முட்டை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.

இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த கார்களும் அடுத்துடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பக்கம் முற்றி லுமாக சேதம் அடைந்து டிரைவர் உடுமலைப்பேட் ைட அருகே மடத்துக்கு ளத்தை சேர்ந்த அருண்குமார் (வயது30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தேவதான ப்பட்டி போலீசார் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி யில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com