திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த ெபண்ணுடன் பிரபாகரன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com