4 வயது மகனை கிணற்றில் வீசி கொன்று அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4 வயது மகனை கிணற்றில் வீசி கொன்று அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி கோனப்பெண்ட் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சித்தேஸ்வரன் என்ற 4 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியை தேவி தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடி 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை தேவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com