search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும்; முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும்; முன்னாள் அமைச்சர் பேச்சு

    • தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.
    • தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராம்குமார், சேகர், ரெத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் அனைவரை யும் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகரங்களில் அ.தி.மு.க. மகளிரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும் பணியை வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்குள் முடித்து படிவஙக்ளை ஒப்படைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி நமக்கு உள்ளதால் தான் தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.

    நாடாளுமன்ற தேர்த லோடு, சட்ட மன்ற தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான் அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், மதியழகன், கோவி.இளங்கோ, கோவி.தனபால், முருகானந்தம், இளங்கோவன், பாரதிமோகன், அசோக்குமார், சாமிவேல், கலியமூர்த்தி, இளம்பெண்கள், இளைஞர் பாசறை செயலாளர் துரை.சண்முகபிரபு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 51-வது வட்ட செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×