ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தி.மு.க. சார்பில் அணிவிக்கப்பட்டது

சிவபத்மநாதன் ஏற்பாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த காட்சி.
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த காட்சி.
Published on

ஆலங்குளம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1-ந் தேதி பிறந்த 2 குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், வீராணம் கிளை செயலாளர்கள் மற்றும் ஊத்துமலை கிளை செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com