தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
Published on

சென்னை:

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போராலும், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பவுன் ரூ.45 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com