பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்தி குத்து; வாலிபர் கைது

திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்தி குத்து; வாலிபர் கைது
Published on

தஞ்சாவூா்:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மேல தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.

திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றி வெங்கடேஷ் ஆத்திரமடைந்து கத்தியால் கேசவனின் கையில் குத்தினார்.

இதில் காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கேசவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com