பெரம்பூரில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் மூதாட்டி பலி

டீ குடிப்பதற்காக கியாஸ் அடுப்பை மூதாட்டி பற்ற வைத்தார். தாட்சாயிணி மீது தீப்பற்றி எரிந்ததால் உடல் கருகிய அவர் அலறி துடித்தார்.
பெரம்பூரில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் மூதாட்டி பலி
Published on

பெரம்பூர்:

பெரம்பூர், ரமணா நகர், சிதம்பரான் தெருவை சேர்ந்தவர் தாட்சாயிணி (வயது 85). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு டீ குடிப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து இருந்தது.

இதனால் அறை முழுவதும் தீப்பற்றியது. தாட்சாயிணி மீதும் தீப்பற்றி எரிந்ததால் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தாட்சாயிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com