search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் ஏரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

    சின்னசேலம் ஏரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

    • சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

    Next Story
    ×