பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற மற்றும் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ெநாச்சிஓடைப்பட்டி நாடகமேடை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, சிவச்சந்திரன், பாலமுருகன், முனியாண்டி, முத்துக்குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை கைப்பற்றினர்.

இதேபோல நொச்சிஓடைப்பட்டியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளைச்சாமி(75) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 68 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1300-ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com