வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல்

வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், கொம்பேறிபட்டி, புத்தூர், கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடைபெற்று வந்தது. திருவிழா காலங்களில் ரங்கர்கட்டை உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து பைனான்சியர்கள் வந்து நிதிஉதவி அளிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரின் தீவிர நடவடிக்கையால் சூதாட்டம் ஒழிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு தெரியாமல் ரகசியமாக கிராமங்களில் உள்ள தோப்புகளில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பணத்தை இழந்து குடும்பத்தில் பிரச்சிைன ஏற்பட்டு வருகிறது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com