மயிலம் அருகே புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்குகடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி ல்வதும் தெரிய வந்தது.
மயிலம் அருகே  புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்குகடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்  அதில் 37 அட்டைப் பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1344 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் வடகரை மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 26), கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சம்மந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பரது மகன் விக்ரம் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபாட்டில் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com