என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள்
    X

    தூத்துக்குடியில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள்

    • நேற்று இரவு அரிச்சந்திரன் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
    • மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் 6-வது தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். (வயது 25). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அரிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவரது நண்பர்கள் அரிச்சந்திரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கு அரிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×