விளாத்திகுளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

முகாமை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஆர்த்தி பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.முகாமில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
கண் சிகிச்சை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
கண் சிகிச்சை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

விளாத்திகுளம்:

மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி மற்றும் ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம், ஆர்த்தி மருத்துவமனை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.முகாமை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஆர்த்தி பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.முகாமில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கண் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு 43 போ்கள் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் ஸ்காட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com