வீரவநல்லூரில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த மர்ம நபர்

வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
வீரவநல்லூரில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த மர்ம நபர்
Published on

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா பாண்டியன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.

சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.

இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் யாரோ மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருப்பதை அறிந்த இசக்கிமுத்து, வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் யார்? எதற்காக தீ வைத்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com