பெரும்பாறை பகுதியில் காபி செடியில் பூத்து குலுங்கும் பூக்கள்

தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன. இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும்
காபி செடியில் பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.
காபி செடியில் பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்க ப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்கள ம்கொம்பு, பூலத்தூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழி லாக உள்ளது.

இங்கு உள்ள தோட்டங்க ளில் காபி, மிளகு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். காபியில் அரேபிகா, ரோபோஸ்டா என 2 ரகங்கள் உள்ளன. பெரும்பாறை பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com