கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாடு

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக மலர் வழிபாடு நடைபெற்றது
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கோடை விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று மலர் வழிபாடு நடைபெற்றது. கோவ
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கோடை விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று மலர் வழிபாடு நடைபெற்றது. கோவ
Published on

கொடைக்கானல்:

உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் அலங்கார வழிபாடு நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் ஒரு சில பொருட்களை நினைவுபடுத்தினர். நவ தானியங்களால் முருகன் உருவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புல் கராவைக்கொண்டு கொடைக்கானலில் புகழ்பெற்ற நட்சத்திர ஏரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

 முருகனின் அறுபடை வீடுகளை நினைவுபடுத்தும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர். கொடைக்கானல் கொடை இன்டர்நேஷனல் உரிமையாளர் பாண்டுரங்கன் நிகழ்வில் கலந்து கொண்டு மலர் வழிபாடுஏற்பாடுகளை செய்திருந்தார்.

வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கொடை இன்டர்நேஷனல் ஹோட்டல் உரிமையாளர் பாண்டுரங்கன் சார்பாக மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடை இன்டர்நேஷனல் மேலாளர் ருத்ரமூர்த்தி, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி,  தண்டாயுதபாணி கோவில் அறங்காவல் துறை கண்காணிப்பாளர் முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com