கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது

பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது
Published on

ஊட்டி,

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் பலத்த மழையால் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றிமுற்றி பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாடந்தொரை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கம்மாத்தி, பாடந்தொரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com