search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று குடிமைப்பணிக்கான முதல்  நிலை தேர்வு
    X

    கோவையில் இன்று குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வு

    • 24 மையங்களில் நடந்தது.
    • பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கோவை,

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கி ழமை) நடைபெற்றது.

    கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் நடந்த தேர்வை 9 ஆயிரத்து 447 பேர் எழுதினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் கலெக்டர் சமீரன் தலைமையில் 8 சப்-கலெக்டர்கள், 24 தாசில்தார்கள், 40 துணை தாசில்தார்கள், 414 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வை பார்வையிட மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ சண்முகராஜா,டாக்டர் வள்ளலார் ஆகி யோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணிக்குள்ளும், மதியம் நடைெபறும் தேர்வுக்கு பிற்பகல் 1.30 மணிக்குள்ளும் மையங்களுக்கு வந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    தேர்வு வளாகத்துக்குள் செல்போன், டிஜிட்டல் கைக் கடிகாரம் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி க்கப்படவில்லை. கருப்பு மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    தேர்வு மைய வளாகத்துக்குள் கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தேர்வு எழுதுபவர்கள் கடைபிடித்தனர்.

    தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.தேர்வு மையங்களுக்கு உக்டம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பொள்ளாச்சி போன்ற பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    Next Story
    ×