search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு முதலுதவி செயல்விளக்க பயிற்சி
    X

    மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    மாணவர்களுக்கு முதலுதவி செயல்விளக்க பயிற்சி

    • முதலுதவி சாதனங்களை கையாள்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபடுவது?

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினரால் பேரிடர் கால மீட்பு பணி, முதலுதவி குறித்த ஒத்திகை மற்றும் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் முன்னிலையில் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வது அருகாமையில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களை காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    முதலுதவி சாதனங்களை கையாளுவது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் தெரிவித்தனர்.

    பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    Next Story
    ×