search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்- கோவை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
    X

    தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்- கோவை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

    • முன்அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவுறுத்தல்
    • குறைந்த அளவில் மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதனை பின்பற்றி பொது மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    குறைந்த ஓலி மற்றும் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிப்பது மிகவும் நல்லது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளிகளில் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மேலும் குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசு வெடிகளை அரசு அனுமதித்த நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×