வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி பெண் சமூக ஆர்வலர் தண்ணீரில் இறங்கி போராட்டம்

கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது.
வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலரை படத்தில் காணலாம்.
வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலரை படத்தில் காணலாம்.
Published on

ஆண்டிபட்டி:

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நர்மதா (வயது 46). இவருக்கு திருமணமாகி நந்தகுமார் என்ற கணவரும், 18 வயது மகனும் உள்ளனர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

சமூக ஆர்வலரான இவர் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.

தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வைகை அணை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினார். மேலும் கண்ணகி நகர் மக்கள் பிரச்சனை உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கு வந்த நர்மதா வைகை அணை நீரில் இறங்கி வழிபட்டு தனது போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள வைகை அணையை பாதுகாக்கவும், இதனை தூர்வாரினால் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும் என்பதை அரசுக்கு வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 8 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.

இதே போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு பகுதியை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் வைகை அணையை தூர் வார ரூ.89 லட்சம் ஒதுக்கினாலே போதுமானது. ஆனால் இந்த நிதியை ஒதுக்காமல் வைகை அணையை தூர் வாராமல் வைத்துள்ளனர்.

இதனால் மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது. மேலும் வைகை அணை நீர் வெளியேறும் வரத்து வாய்க்கால் பகுதிகளும் தூர் வாரப்படாமல் உள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com