

உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் முருங்கை விவசாயத்தை மேம்படுத்த முதிர்வு அடைந்த முருங்கைகளை வெட்டி விட்டு மீண்டும் தளிர் விட வைத்து உள்ளனர். முதிர்வு அடைந்த முருங்கையை மீண்டும் வெட்டிவிட்டு வளர்த்தால் முன்பை விட அதிகமாக காய்க்கும் என்று விவசாயி ஒருவர் கூறினார். மற்றொரு விவசாயி கூறும்போது, முருங்கைக்காய் மகசூலை அதிகரிக்க முதிர்வு அடைந்த முருங்கைமரத்தின் கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு, நிலத்தை கிளறி விட்டு விவசாயம் செய்தால் முருங்கை வேகமாக வளரும் முன்பை விட காய்ப்பு திறன் அதிகரிக்கும் என்று கூறினார், இதனால் ஏராளமான முதிர்வு அடைந்த முருங்கைகளை விவசாயிகள் வெட்டிவிட்டுள்ளனர்.