விவசாயிகள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்- வேளாண் அதிகாரி தகவல்

வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்- வேளாண் அதிகாரி தகவல்
Published on

பூதலூர்:

பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com